ஊழல் வழக்கில் மேல்முறையீடு: பிரேசில் முன்னாள் அதிபருக்கு கூடுதல் தண்டனை

259 0

ஊழல் மற்றும் பண முறைகேடு வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலாவு மேல்முறையீடு செய்ததில் கூடுதல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 2003 முதல் 2010 வரை அதிபராக பதவி வகித்தவர் லூயிஸ் இனாசியோ லுலா. இவரது பதவிக்காலத்தில் ஊழல் மற்றும் சட்ட விரோதமாக பணப்பறிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் மீதான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கின் மீதான் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்தது. மேலும், 9 1/2 ஆண்டுகள் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருதார்.

இவ்வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், கீழமை நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவித்தது உறுதிப்படுத்தப்பட்டது. 9 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை 12 ஆண்டுகளாக நீட்டித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் அந்நாட்டின் இந்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a comment