கவுதமாலா: மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி

249 0

மத்திய அமெரிக்காவின் கவுதமாலா நகரில் மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய அமெரிக்காவின் கவுதமாலா நாட்டில் உள்ள சான் பெரரோ நெக்டா பகுதியில் நேற்று மினி பஸ் சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையில் திரும்பும் போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விபத்துக்கான உடனடி காரணங்கள் தெரியவில்லை என கூறிய போலீசார், இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

Leave a comment