கிழக்கு ரஷ்ய கடல் பகுதியில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ரஷ்ய கடல் பகுதியில் உள்ள கோமாண்டோர்ஸ்கியே ஒஸ்ட்ரோவா தீவில் இருந்து 41 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கி.மீ ஆழத்தில் உருவான இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
எனினும், இந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.