அனுராதபுரம் மயிலகஸ்சந்தி பகுதியில் வீடொன்றை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மதில் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததன் காரணமாக 2 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது சகோதரியுடன் வீட்டுத்தோட்ட மதிலுக்கு அருகாமையில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே மதில் உடைந்து சிறுவனின் மீது விழுந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் வேளையில் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சகோதரிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.