விடுதலைப் புலிகளின் (ஃ)ஆய்த எழுத்து இலக்கத்தகடு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தலைமையின் கீழ் பல படையணிகளாக நிர்வகிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு நிர்வகிக்கப்பட்டிருந்த படையணிகளுக்கு தமிழ் எழுத்துக்களின் ஒன்றை பதித்து அடையாளப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் எழுத்துக்களில் ‘ஐ’ என்னும் உயிர் எழுத்து உலகம் முழுவதும் அறிந்த புலனாய்வுத்துறை படையணியை குறிக்கும் எழுத்தாக அது காணப்பட்டது.இந்த நிலையில் இன்று மீட்கப்பட்ட தகடு ஆய்த எழுத்துடன் காணப்படுவதுடன், இதுவரை யாரும் அறிந்திராத படையணியாக குறிப்பிடப்படுகின்றது.
2009 ஆண்டிற்கு முன்னார் விடுதலைப் புலிகளின் படையணிகள் இலங்கை முப்படையினரை எதிர்த்து வடக்கு -கிழக்கு மாகாணங்களில் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.இவ்வாறன சந்தர்ப்பத்தில் குறித்த தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நேரடி நெறிப்படுத்தலில் நடாத்தப்பட்டுள்ளதாக தமிழ் எழுத்துக்களை பதித்த படையணிகள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.