இரண்டாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்று

233 0
உள்ளூர் அதிகார சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான இரண்டாம் கட்டம் இன்று (25) இடம்பெறுகிறது.

தபால் மூல வாக்காளர்களுக்கு இன்று மற்றும் நாளை தபால் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூர் அதிகார சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான முதற்கட்ட நடவடிக்கை 22 ஆம் திகதி தேர்தல் அலுவலகங்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்றன.

ஏனைய அரச அலுவலகங்கள், கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், போக்குவரத்துச் சபை டிப்போக்கள், பாதுகாப்பு படை முகாம்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களில் தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறும்.

தபால் மூல வாக்குப்பதிவின் போது புகைப்படம் எடுப்பதை முழுமையாக தடை செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

.

Leave a comment