பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற 230 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

235 0

இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சி காரியாலங்களை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காட்சி படுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளையே இவ்வாறு அகற்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அகற்றல் பணிகளுக்காக 230 மில்லியன் ரூபாய் தேர்தல் ஆணைக்குழுவினால் பொலிஸாருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment