அதிபரை மண்டியிட வைத்த சம்பவம்; 07 பேருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

234 0
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, அதிபர் ஒருவரை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து திட்டி, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரிக்க, மாகாண கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட 07 பிரதிவாதிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வௌியான பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

அதன்படி இது தொடர்பான விசாரணை நாளை (25) காலை 10.00 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் முன்னிலையில் இடம்பெற உள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் அத தெரணவிடம் கூறினார்.

விசாரணைகளுக்கு அமைவாக வாக்குமூலம் பதிவு செய்து கொள்வதற்காக ஊவா மாகாண கல்வி செயலாளர், ஊவா மாகாண கல்வி பணிப்பாளர், பதுளை வலய கல்விப் பணிப்பாளர், பதுளை தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ஊவா மாகாண சபையின் உத்தியோகத்தர்கள் மூவர் இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர பதுளை மகளிர் தமிழ் பாடசாலையின் அதிபரும் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Leave a comment