ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அழைப்பாணை

251 0

பதுளை பாடசாலை பெண் அதிபரொருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறு ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்த்யா அம்பன்வல உள்ளிட்ட சிலருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

அதன்படி ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்த்யா அம்பன்வல, மாகாண கல்வி பணிப்பாளர் ரத்நாயக்க, வலய கல்விப் பணிப்பாளர் ரணசிங்க, பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாகாண சபை ஊழியர்கள் இருவர் ஆகியோருக்கு நாளை இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்திற்கு வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பாடசாலை அதிபர், முறைப்பாட்டாளர்கள் சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment