ரயிலில் மோதுண்டு இளம் குடும்பப்பெண் பலி!!

237 0

கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா – தாண்டிகுளம் பகுதியை சேர்ந்த கமலவதனா(கமலி) என்ற 35 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இன்று காலை வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

தனது ஆறு வயதுடைய மகனுடன் ரயிலிருந்து மற்றுமொரு ரயிலுக்கு மாறும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தாய் உயிரிழந்துள்ள நிலையில், மகன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

மேலதிக, விசாரணைகளை  வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இவர் வவுனியா ECBC நிறுவனத்தின் பணிப்பாளரும், நெளுக்குளம் தொழில்நுட்ப கல்லூரியின் ஆசிரியருமான கிருஷ்ணகுமார் அவர்களின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment