மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

276 0
தம்புள்ள – குருநாகல் வீதியில் சமன்புர பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாதையை கடக்க முற்பட்ட ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் மோதியதி​லேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குருநாகல் பகுதியை சேர்ந்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டதோடு குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment