110 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிப்பு

268 0

மருதங்கேணி தலையடி பிரதேசத்தில் கடற்கரை பகுதியின் புதர்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 110 கிலோ கேரள கஞ்சா கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

50 பொலித்தீன் உறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதைப்பொருட்களின் பெறுமதி ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment