ஐ.நா செயலாளரின் கவனத்தை ஈர்க்குமுகமாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

332 0

unnamed (18)ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் யாழ் வருகை யையிட்டு யாழ் பொது நூலகத்திற்கு முன்பாக பாதிக்கப்பட்ட உறவுகள் ஐ.நாவின் செயற்பாடுகளைக் கண்டித்தும், காணாமல் போனவர்களை மீட்டுத் தரக் கோரியும், படையினரால் ஆக்கிமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்குமாறும் ஒன்று கூடி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பான் கீ மூன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈட்பட்டிருந்த போது வெளியில் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் ஐ.நா அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனுக்களை கையளித்திருந்தனர். கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் காணாமல் போன மக்கள் எங்கே? எங்கே?, எங்கள் நிலம் எமக்கு வேண்டும், தமிழர் கிராமங்கள் விடுவிக்கப்பட வேண்டும், எமது கடல் எமக்கு வேண்டும், இராணுவமே வெளியேறு, வலிகாமம் வடக்கை விடுதலை செய், முள்ளிவாய்காலை விடுதலை செய், கேப்பாபுலவை விடுதலை செய் என கோசங்கள் எழுப்பியிருந்தனர்.

unnamed (13)