மன்னார் மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று நடைபெற்றது.
மன்னாரில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் அந்தோனி சகாயம் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.