சைட்டம் தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல் 26 இல்

343 0

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஜனாதிபதி உபகுழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பிலான மேலதிக கலந்துரையாடலொன்று எதிர்வரும் 26ம் திகதி இலங்கை மருத்துவ சபையில் இடம்பெறவுள்ளதாகவும் சட்டமா அதிபர் இன்று உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார்.

அதனை அடுத்து மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான மனு எதிர்வரும் 29ம் திகதிக்கு பிற்போடப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.

Leave a comment