சுவிசில் நினைவு கூரப்பட்ட கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 25வது நினைவெழுச்சி நாள்!

20497 0

வங்கக் கடலின் நடுவே தியாக வேள்வித் தீயினில் சங்கமித்து வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவுகள் சுமந்த நினைவெழுச்சி நாளானது 21.01.2018 வோ மாநிலத்தில் நினைவுகூரப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளிற்கான ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த பாடல்கள் இசைக்கலைஞர்களினால் இசைக்கப்பட்டன.

அழித்துக் கொள்வோம், அடிபணியோம் என்று தம்மை ஆகுதியாக்கி வரலாறாகிய மாவீர வேங்கைகளின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் காணிக்கை நிகழ்வுகளாக இளையோர்களின் எழுச்சி நடனம், எழுச்சிப்பாடல்கள், வீணாகானம், பேச்சுக்கள், கவிதைகளுடன் இசைக்கச்சேரியும் அமைந்திருந்தன. காலத்தின் தேவை கருதிய சிறப்புரையும் இடம்பெற்றிருந்ததுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச் செயற்படுத்த மீண்டும் 12.03.2018 அன்று ஐ.நா நோக்கி அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க ஆயத்தமாகுமாறு அனைத்து தமிழ் உறவுகளையும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உரிமையோடு இத்தருணத்தில் வேண்டி நிற்கின்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு. 

Leave a comment