பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபரை மண்டியிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
தனது சட்டத்தரணி ஊடாக பதுளை பொலிஸ் நிலையத்தில் அவர் இன்று சரணடைந்துள்ளதாக, பொலிஸார்குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.