நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள்

12243 0

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 121-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அவரது திருவுருவச் சிலை மற்றும் திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, நேதாஜிக்கு புகழாரம் சூட்டி தகவல் பதிவு செய்துள்ளார். அதில், “சுபாஷ் சந்திர போசின் வீரம், ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடையச் செய்கிறது. அவரின் பிறந்தநாளான இன்று, அந்த மாபெரும் ஆளுமையின் முன்னால் தலைவணங்குகிறோம்” என்று மோடி கூறியுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, அதன் அருகில் அவரது திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நேதாஜி சிலைக்கு கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Leave a comment