” நாம் கொண்டு வந்த அரசாங்கத்தில் திருடர்கள், பாதாளகுழுக்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் தொடர்புடையவர்கள் இருக்கின்றனர், அவர்களால் நல்லாட்சியின் பயணத்தை தடுக்க முடியாது. அவர்களை வெளியேற்றி விட்டு நாங்கள் பயணத்தைத் தொடருவோம்” என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மாத்தளை கொங்காவெல பிரதேசத்தில் நேற்று (22) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் உரையாற்றிய அமைச்சர்,
‘ நாம் ஐக்கிய தேசியக் கட்சி, கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நல்லிணக்கம் தொடர்பாக கற்பிக்க தயார். எம்முடன் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைத்து இன வேட்பாளர்களும் ஒற்றுமையுடன் கடமையாற்றுகின்றனர்.
எம்முடைய கட்சி முச்சக்கரவண்டி கட்சியல்ல பாரவூர்தி கட்சி. நான் பராசூட் உறுப்பினரோ, அமைச்சரோ அல்ல. சில பராசூட் அமைச்சர்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான வேலைகளை முன்னெடுக்கின்றனர். நாம் அதற்கு இடமளிக்கமாட்டோம். சிலர் என்னை வீட்டிற்குள் அடைத்து என்னை பயமுறுத்தி தேர்தல் வேலைகளை முன்னெடுக்க நினைக்கின்றனர். அதற்கெல்லாம் பயப்படுவன் நானல்ல’ என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.