காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.,வுக்கு நவாஸ் கடிதம்

432 0

Tamil_News_large_1598384_318_219 (1)ஜம்மு – காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் குறித்து, உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா.,வுக்கு பாக்., பிரதமர் நவாஸ் ஷெரிப் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி புர்கான் வானி என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு கலவரம் ஏற்பட்டது 65 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய பாக்., இவ்விவகாரத்தில் ஐ.நா., தலையிட வேண்டும் எனவும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரிப், ஐ.நா..பொதுச் செயலளர் பான் கீ மூனுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மீறப்படும் மனித உரிமைகளை, பதற்ற நிலையுடன் மட்டும் ஒப்பிடக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளதாக பாக்., வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா தெரிவித்துள்ளார்.