கவனயீனமாக வாகனம் செலுத்தியவருக்கு 5 வருட சிறை

275 0

பாதசாரிகள் கடவையினூடாக பாதையை கடக்க முயற்சித்த சிறுமி மற்றும் தாய் ஆகியோர் மீது கவனயீனமான முறையில் வாகனத்தை செலுத்தி காயத்திற்குள்ளாக்கி உயிரிழக்கச் செய்தமை தொடர்பில் குற்றம் சட்டப்பட்டவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரபல இசை குழுவொன்றின் உறுப்பினரான லசித பிரியசாந்த த சில்வா என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது

இதேவேளை குறித்த நபருக்கு ஒன்றரை இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Leave a comment