மிக் விமான கொடுக்கல் வாங்களுடன் தொடர்புபட்ட நிதி தன்னுடைய கணக்குகளில் வரவு வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான உண்மையான சாட்சிகளை எழுத்துமூலம் நீதிமன்றத்துக்கு வழங்கி நீதியை நிலைநாட்டுமாறு ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளார்.
அனைத்து ஊடகங்களுக்கும் அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமான சொத்துக்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவு தொடர்பிலே அவர் இந்த ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கடந்த 32 வருட காலமாக தான் சட்ட ரீதியாக உழைத்த பணத்தை இலங்கையில் NRFC கணக்குகளில் வாய்ப்பு செய்துள்ளதாகவும், அவற்றை முதலீடு செய்தே இந்த சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த சொத்துக்கள் மீதான நீதிமன்ற தடை அரசியல் பழிவாங்களாகும் என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.