கதிர்காமம் துப்பாக்கிச் சூடு: 58 பேரும் பிணையில்

248 0
கதிர்காமம் நகரில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 58 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் முன் கூடிய மக்களால் அப் பகுதியில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டது.

எனவே, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் 13 பெண்கள் உள்ளிட்ட 58 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களை திஸ்ஸமஹராம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment