13 வருடங்களின் பின்னர் இலங்கை வந்துள்ள அரச தலைவர்

262 0

சிங்கப்பூர் பிரமதரான லீ சிசெயன் லுன்க் இலங்கைக்கான 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (22) இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இவருக்கு நாளை (23) காலை  இராணுவ அணிவகுப்பு மற்றும் கலாசார விழுமியங்களுடனான வரவேற்பு ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்படவுள்ளது.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதுடன், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு கலந்துரையாடலும், சுதந்திர வர்த்தக உடனபடிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

13 வருடங்களின் பின்னர் சிங்கப்பூர் நாட்டின் அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment