சுகாதார அமைச்சருக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

286 0

doctorsமருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலைகளுக்காக முன்வைக்கப்பட்டுள்ள தேசிய மருந்துகள் சட்டமூலமானது அமுலாக்குவது தொடர்ந்து தாமதமானால் சுகாதார அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டு ஒரு வருடம் கடந்தும் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இதனை நடைமுறைப்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் மருந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டு சில மருந்து நிறுவனங்களால் விற்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே மருந்துகள் விலை கட்டுப்பாடுகள் இன்றி விற்கப்படுவதை உடனே தடுப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கொள்ளாவிடின் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.