ஹட்டன் நகரம் போதைப்பொருட்கள் விற்பனையாகும் ஒரு முக்கிய நகரமாக மாறியுள்ளது- ஆறுமுகன் தொண்டமான் (காணொளி)

11888 57

நாட்டில் உள்ள நகரங்களில், ஹட்டன் நகரம் போதைப்பொருட்கள் விற்பனையாகும் ஒரு முக்கிய நகரமாக மாறியுள்ளதாகவும், உள்ளுராட்சி தேர்தலில் வெற்றிபெறும் பொழுது, ஹட்டனிலிலுள்ள போதைப்பொருட்களை ஒழித்து, ஒரு தூய்மையான நகரத்தை உருவாக்க முடியும் எனவும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு ஆரியகம தொகுதியில் போட்டியிடும் வர்த்தகர் சோமசுந்தரம் மற்றும் ஹைலன்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.விஜயசிங் ஆகிய இருவரையும் வாக்காளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு, ஹட்டன் தும்புறுகிரிய வீதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment