நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வறட்சியான காலநிலை காரணமாக இரண்டு இலட்சத்து 57,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்த மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரவி ஜெயரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிலும் அதிக பாதிப்பு புத்தளம் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும், அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் கூறியுள்ளது.
இதேவேளை, குறித்த மாவட்டங்களுக்கான குடிநீர் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ரவி ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.