ஜனாதிபதி தலைமையில் நேற்று கேகாலையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொள்ளச் சென்ற, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர், தனியார் பஸ்ஸின் சக்கரங்களில் சிக்குண்டு பலியாகியுள்ளார்.
மேலும், இவ்வாறு பலியானவர் ரம்புக்கனை – தல்தெவ பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவராகும்.
ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்திற்காக, பஸ்ஸில் வந்த ஒரு குழுவினர், ரன்வல சந்தி – ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்னால், கூட்டத்திற்காக செல்லும் பேரணியில் கலந்து கொள்வதற்காக நின்றுள்ளனர்.
இதேவேளை, அப் பகுதியில் வாகன நெரிசலும் அதிகமாக இருந்துள்ளது.
அப்போது, அந்தப் பகுதியில் கழியாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களுக்கு முன்னால் பஸ் ஒன்று வந்தமையை அடுத்து, ஒருவர் கீழே விழுந்துள்ளார்.
இந்தநிலையில், தனியார் பஸ் ஒன்றின் சில்லில் தலை நசுங்குண்ட நிலையில், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல முன்னரே குறித்த ஆதரவாளர் பலியாகியுள்ளதாக, தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.