பொலன்னறுவை மாவட்ட போதைப் பொருள் விஷேட சுற்றிவளைப்புப் பிரிவினர் இன்று மேற்கொண்ட நடவடிக்கைகளில், குடு சுத்தா எனப்படும் நபரின் சகோதரர் உள்ளிட்ட மூவர் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, குடு சுத்தா எனப்படும் நபர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இன்று கைதானவர்கள், அவரது சகோதரர், சகோதரி மற்றும் அவரது (சகோதரியின்) 15 வயதான மகளுமே என தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த குடும்பத்திலுள்ள அனைவரும் போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்புடையவர்கள் என அப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.