பொலிஸ் கீதமும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு விளங்கும் வகையில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட கீதம் நேற்று வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வின் போது பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த கீதத்தின் மொழிபெயர்ப்பு இசையமைப்பாளர் கந்தப்பு ஜயந்தனினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
151 வருட பழைமையுள்ள பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலின் பேரில் பொலிஸ் கீதம் தமிழில் இசைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.