தன்மீது சுமத்தப்பட்டுள்ள பாடசாலை ஆசிரியரை அச்சுறுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை ஊவா மாகாண கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து தான் நீங்கப் போவதாக முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சர் சமார சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தன்னை அழைத்து அச்சுறுத்தியதாக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாணவி ஒருவரை பாடசாலையில் அனுமதிக்குமாறு முதலமைச்சர் அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருந்ததற்கு, கல்வி அதிகாரிகளின் ஆணைக்கு மட்டமே தன்னால் கட்டுப்பட முடியும் எனக் கூறி முதலமைச்சர் சாமர சம்பத்தின் கோரிக்கையை அதிபர் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காகவேண்டியே குறித்த அதிபர் முதலமைச்சரினால் அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.