ஊவா முதலமைச்சர் அதிபரை அச்சுறுத்தி, முழந்தாழிடச் செய்ததாக கூறப்படும் செய்தி தவறானது எனவும் இது ஊடகங்களினால் சோடிக்கப்பட்ட ஒன்று எனவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார்.
ஊவா முதலமைச்சர் தன்னிடம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை தெளிவாக கூறினார். இந்த தேர்தலில் ஊவா முதலமைச்சரின் மனைவியும் போட்டியிடுகின்றார்.
இதற்கு முன்னர் இடம்பெற்றது போன்று இதுவும் ஊடகத்தினால் சோடிக்கப்பட்டது எனவும் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய மேலும் கூறினார்.