மத்திய வங்கி பிணை முறியின் தாக்கம் 2045 வரை நீடிக்கும்- பந்துல

244 0

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்திற்கு தற்போது தீர்வு கிடைத்தாலும், அது நிரந்தரமானது கிடையாது எனவும் இதன் தாக்கம் 2045 ஆம் ஆண்டு வரைக் நீடிக்கும் எனவும் மஹிந்த குழு  பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமது ஆட்சியில் இடம்பெற்ற 2 ஆயிரம் பில்லியன் ரூபா நட்டத்தினை மறைக்க ஐக்கிய தேசிய கட்சி மக்கள் மத்தியில் தற்போது கபட நாடகத்தினை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளது. இதனால், பாதிக்கப்படுபவர்கள் அப்பாவி நடுத்தர மக்களே என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment