கொழும்பிலுள்ள அமெரிக்க மத்தி நிலையம் (American Centre) மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க டிரம்ப் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் செனட் சபையில் தோல்வியடைந்ததனால் அமெரிக்கா பொருளாதார நெருக்கடி நிலைக்கு உட்பட்டுள்ளது. இதன் ஒரு விளைவே இந்த அமெரிக்க மத்திய நிலையம் தொடர்பான தீர்மானம் எனக் கூறப்படுகின்றது.
அமெரிக்காவிலும் பல அரச நிறுவனங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், அமெரிக்காவுக்கான வீசா வழங்கும் நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.