இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்முனை கிரிக்கட் போட்டி

285 0

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்முனை கிரிக்கட் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தப் போட்டிக்காக விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியா, பங்களாதேஷ் அணிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக, இலங்கை கிரிக்கட் அமைப்பின் தலைவர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியாக நடைபெறவுள்ள இந்த மும்முனை கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 20ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இந்தப் போட்டியில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளின் முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Leave a comment