சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்ஸ் (Lee Hsien Loong) நாளை (22ம் திகதி) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று நாட்டுக்கு வரும் அவர், 24ம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார்.
அத்துடன், 23ம் திகதி காலை ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று, மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கும் சிங்கப்பூர் பிரதமர், சில உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிடோரையும் லீ ஷியன் லூங்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 24ம் திகதி இந்தோனேசிய ஜனாதிபதி ஜக்கோ விதோதோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.