கதிர்காமம் துப்பாக்கிச் சூடு: விசாரணைகளுக்காக விஷேட குழு

273 0
கதிர்காமம் நகரில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய அப் பகுதிக்கு விஷேட குழுவொன்றை அனுப்புமாறு, பொலிஸ்மா அதிபர் பணித்துள்ளார். 

நேற்று இரவு கதிர்காமம் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தும் படி, பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.

எனினும், அதனை பொருட்படுத்தாது சென்ற குறித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார். பின்னர், அப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு, எதிர்வரும் 30 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment