கஞ்சா தேடிச் சென்ற பொலிஸார் காட்டு யானையால் துப்பாக்கியை தவறவிட்ட அவலம்

291 0

கதிர்காமம் – லுணுகம்வேஹெர வனப் பகுதியில் காணாமல் போன துப்பாக்கியை தேடும் நடவடிக்கைகளை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் நேற்று அதிகாலை, கஞ்சா தொடர்பான சுற்றிவளைப்புக்காக சென்ற போது, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

பின்னர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரைக் காப்பாற்ற முற்பட்ட வேளை ஒருவரது டி – 56 ரக துப்பாக்கி தவறி விழுந்துள்ளது.

இதேவேளை, காட்டு யானையின் தாக்குதலால் இரு கான்ஸ்டபில்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், காணாமல் போன துப்பாக்கியைத் தேடும் நடவடிக்கைகள், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a comment