இலங்கை காவல்சேவை 150 வருட நிறைவை முன்னிட்டு நாளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவிற்கு 50 இலட்சத்துக்கு உணவுக்குப் பின்னரான வழங்கப்படும் இனிப்புகள் கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த விழாவிற்கு கொழும்பில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 4000 இனிப்புப் பெட்டிகளுடன், சிறப்பு அதிதிகளுக்கு வழங்கவென 250 இனிப்பு பெட்டிகளும் கொள்வனவு செய்யப்படவிருந்ததாகவும் காவல்துறை தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
எனினும் கடைசி நிமிடத்தில் உயர் அதிகாரி அல்லது மேலிடத்தின் உத்தரவுக்கமைய இந்த இனிப்புப் பெட்டிகள் கொள்வனவானது இரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.