பண மோசடியில் ஈடுபட்ட அஞ்சல் நிலைய அதிகாரியை பதினான்கு நாட்கள் விளக்கமறியல்!

284 0

மடுவில், இருபத்திரண்டு இலட்ச ரூபா பண மோசடியில் ஈடுபட்ட அஞ்சல் நிலைய அதிகாரியை பதினான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

மடு அஞ்சல் அலுவலகத்தின் பிரதான அதிகாரியாக இருந்த குறித்த நபர், கடந்த சில வருடங்களாக நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இது, உயரதிகாரிகளால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைக்கு பயந்த குறித்த அதிகாரி தலைமறைவானார். எனினும், சில நாட்களுக்கு முன் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குறித்த அதிகாரியை இரு வார காலம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Leave a comment