அதிபருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

539 0

பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றச்சாட்டின் கீழ் ஊவா மாகாண முதலமைச்சர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என அதிபர்கள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரத்திற்கு கட்டுப்படாத பதுளை பாடசாலை அதிபரை மண்டியிட வைத்தமை குறித்து இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அதிபர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டிய மாகாண கல்விச் செயலாளரின் பொறுப்பற்ற செயற்பாடு குறித்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

மேலும் அரச சேவையின் உயர் பதவி வகிக்கும் ஜனாதிபதி செயலாளர் இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தி குறித்த தமிழ் பாடசாலை அதிபருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளர்.

Leave a comment