பாராளுமன்றில் ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிச்சயமாகக் கொண்டுவரப்படும்

311 0

பிரதமரை பதவியில் இருந்து அகற்ற முயற்சித்தால், பாராளுமன்றில் ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

மேலும், அப்படியொரு பிரேரணை கொண்டுவரப்படும் சந்தர்ப்பத்தில், கூட்டு எதிரணியினரின் ஆதரவைப் பெறவும் தாம் தயங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின் பிரதமர் மாற்றப்படுவார் என்றும் புதிய அரசு தோற்றுவிக்கப்படும் என்றும் கிளம்பியுள்ள வதந்திகள் குறித்துப் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலின் பின் புதியதொரு அரசியல் பயணத்தை ஜனாதிபதி ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதற்கு ஐ.தே.க. மற்றும் கூட்டு எதிரணியினரின் ஆதரவு கிடைக்கும் எனவும் ஸ்ரீல.சு.க.வின் முக்கியமான உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment