எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த அறிக்கையை அளிக்க வேண்டிய கடைசி நாள் இன்று (20). இது எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினத்தினுள் சொத்து அறிக்கையைச் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன் தமது சொத்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அப்படித் தவறுமிடத்து அவர்களது தேர்தல் அலுவலகங்களின் இயக்கம் தடை செய்யப்படுவது உட்பட அவர்கள் மீது பல நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியும்.