வேட்பாளர்கள் 23 பேர் கைது!

229 0

உள்ளூராட்சித் தேர்தலில், தேர்தல் விதிகளை மீறிய மற்றும் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் இதுவரை 23 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த மாதம் 9ஆம் திகதி முதல் நேற்று (19) வரை, தேர்தல் தொடர்பாக 209 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 250 தேர்தல் முறைப்பாடுகள் இதுவரை பொலிஸ் தலைமையகத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றில் தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்பவங்கள் 75 எனவும் எஞ்சியன தேர்தல் முறைப்பாடுகள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Leave a comment