மஸ்கெலியா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய பாதம்

329 0

மஸ்கெலியா, வட்மோர் தோட்டப் பகுதியில் இன்று (20) காலை ‘கடவுளின் (!)’ வலது கால் பாதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகப் பரவிய செய்தியையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மனிதர்களுடைய பாதச் சுவட்டை விடப் பெரிதாகக் காணப்படும் இந்தப் பாதச் சுவட்டை முதலில் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த அப்பகுதிவாசிகள் உடனடியாக அது குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.

அதற்கிடையில், தகவல் கேள்விப்பட்ட மக்கள், அது கடவுளின் பாதச் சுவடாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணியதுடன், அதற்கு மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து பூஜையும் நடத்தியிருந்தனர்.

அங்கு வந்த பொலிஸார், குறித்த பாதச் சுவடு எவ்வாறு அங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment