தமிழக மக்களின் அன்பையும், பாசத்தையும் என்னோடு எடுத்து செல்கிறேன்

337 0

201609020738443360_rosaiah-says-Tamil-Nadu-people-love-and-affection-take-with_SECVPFதமிழக கவர்னர் பதவி காலம் முடிந்து தற்காலிக கவர்னர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கே.ரோசய்யா தமிழக மக்களிடம் இருந்து பிரியா விடை பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தமிழக கவர்னர் பதவி காலம் முடிந்து தற்காலிக கவர்னர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கே.ரோசய்யா தமிழக மக்களிடம் இருந்து பிரியா விடை பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோசய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக தமிழக கவர்னராக நான் பனியாற்றியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமும், பெருமையும் ஆகும். எனது பதவி காலம் மற்றும் தமிழக மக்கள் என் மீது காட்டிய பாசத்தையும், பொழிந்த அன்பையும் என்னுடன் எடுத்து செல்கிறேன். தமிழகம் மிக வேகமான வளர்ச்சியில் பீடுநடைபோடுகிறது. முன்னணி மாநிலங்களில் ஒரு மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் கலாசாரத்தின் தலைநகராக விளங்குகிறது.

இங்குள்ள தரம் வாய்ந்த உயர் கல்விகளில் அமைதியை விரும்பும் மற்றும் கடின உழைப்புக்கு பெயர் போன மக்களாலும் இது ஒரு கல்வி மையமாக திகழ்கிறது.

பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் கல்வி தரத்தை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் எடுத்துள்ளேன். எதிர்கால சந்ததியர்கள் ஆகிய மாணவர்களிடையே தன்னம்பிக்கை, உத்வேகத்தை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சியில் புதுமை, யோகா மற்றும் தியானம் போன்ற பல திட்டங்கள் உயர்கல்வியில் அறிமுகப்படுத்த நான் காரணமாக இருந்திருக்கிறேன்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள், இந்நாள் துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், பல்வேறு தன்னார்வ மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், வர்த்தக சபையினர், நண்பர்கள், ஊடகங்கள், கவர்னர் மாளிகை அலுவலர்கள், ஊழியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்களின் அன்புக்கும், பாசத்துக்கும் நான் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் கவர்னராக இருந்த போது என் மீது காட்டிய அன்புக்கு பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக மக்களுக்கு எனது நல்வாழ்த்துகள். எப்போதும் அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்வேன்.
இவ்வாறு ரோசய்யா கூறியுள்ளார்.