அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள கென்னடி விண்வெளி மையத்தில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளி ஓடத்தினை செலுத்துவதற்கு தயாரான நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் குறித்த வெடிப்பு சம்பவத்தினால் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பதுடன்,வெடிப்புக்கான காரணமும் தெரியவரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பரவியுள்ள புகை மண்டலம் தொடர்பான புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.