சட்டவிரோத பொலிதீன் தயாரிப்பு நிலையங்கள் சுற்றிவளைப்பு

263 0

தடை செய்யப்பட்டுள்ள பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்தும் நிறுவனங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை கூறியுள்ளது. 

அடையாளம் காணப்பட்டுள்ள 10 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக அந்த அதிகாரசபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர கூறினார்.

மனிதப் பயன்பாட்டுக்கு உட்படக்கூடிய பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புக்களை மேற்கொள்கின்ற தனியார் நிறுவனங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

Leave a comment