குவைத்தில் தனது நாட்டு தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள பிலிப்பைன்ஸ், அந்நாட்டுக்கு வேலைக்குச் செல்ல தனது குடிமக்களுக்கு தடை விதித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் இருந்து மட்டும் 23 லட்சம் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடான குவைத்தில் 2.5 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அங்கு வேலையில் இருக்கும் பிலிப்பைன்ஸ் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்வதாக புகார் எழுந்தது.
இது போன்ற புகார்கள் அதிகளவில் எழுந்துள்ள நிலையில், குவைத்துக்கு வேலைக்காக செல்ல தனது குடிமக்களுக்கு தற்காலிக தடை விதித்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ உத்தரவிட்டுள்ளார். பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.