ஒரு ரத்தப் பரிசோதனை மூலம் கர்ப்பபை, கல்லீரல், வயிறு, கணையம் என 8 விதமான உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்று நோயை கண்டுபிடிக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
உயிர்க்கொல்லி நோயான புற்று நோய் அதன் அறிகுறி மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது. அதை துல்லியமாக கண்டறிய பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தற்போது அதை மிக எளிதான ரத்த பரிசோதனை முலம் கண்டுபிடிக்க முடியும். அதுவும் ஒரு பரிசோதனையின் மூலம் கர்ப்பபை, கல்லீரல், வயிறு, கணையம், நுரையீரல், மார்பக பெருங்குடல், உணவுக் குழாய் என 8 விதமான உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்று நோயை கண்டுபிடிக்க முடியும்.
இதற்கு குறைந்தபட்சம் ரூ.32 ஆயிரம் (500 டாலர்) செலவாகும். இந்த ஆய்வை அமெரிக்காவின் மியான்மரில் உள்ள ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக நிபுணர்கள் நடத்தி கண்டு பிடித்துள்ளனர்.
ரத்த பரிசோதனை மூலம் 1005 நோயாளிகளிடம் புற்று நோய் 70 சதவீதம் கண்டறியப்பட்டது.